பெங்களூரு தெற்கு பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா அவர்கள் கடந்த வியாழக்கிழமை (மே 5) அன்று பிரபல மருத்துவமனையில் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். அப்பொழுது கொரோனா வார்டில், பல தில்லு, முல்லு, சம்பவங்கள் அரங்கேறி இருப்பதை அவர் கண்டுபிடித்தார். இதற்கு காரணமான 16 முஸ்லிம் ஆண்களின் பெயர்களை பா.ஜ.க எம்.பி. மக்கள் முன்பு சுட்டிக்காட்டி இருந்தார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மற்றும் உண்மையை திட்டமிட்டே மறைக்கும் ஊடகங்கள், பா.ஜ.கவை வெறுக்கும் பிரிவினைவாதிகள் முதற்கொண்டு தேஜஸ்வி சூர்யா குறித்து தவறான கருத்தினை கூறி வந்தனர்.
இந்நிலையில் பா.ஜ.க எம்.பி., பெங்களூரில் நடந்த சம்பவம் குறித்து மன்னிப்பு கேட்டுள்ளதாக பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. எப்பொழுது அவர்களுக்கு செய்தி கிடைக்கவில்லையோ, அப்பொழுது அவர்கள் பொய் செய்தியை உருவாக்குவார்கள் என்று பா.ஜ.க எம்.பி. தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
When one has no news, they create fake news. https://t.co/MfBPuSAW2R pic.twitter.com/r7jHrq1OdD
— Office of Tejasvi Surya (@Offtejasvisurya) May 7, 2021