மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் மிருக பலத்துடன் ஆட்சியை பிடித்தது. இதனை அடுத்து பா.ஜ.க, கம்யூனிஸ்ட், கட்சியை சேர்ந்தவர்களின். வீடுகள், அலுவலகங்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் நடத்திய தாக்குதலில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முரளிதரன் அவர்கள் மேற்கு வங்க நிலைமையை ஆராய சென்ற பொழுது. அவரின் காரும் மிக கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. அமைச்சரின் காரை வழிமறித்து கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
”ஸ்டிக்கர்” ஆட்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். கழக ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், ஒரு சிறு செய்தியை கூட தமிழக மக்களுக்கு தெரியாத வண்ணம் தங்களது ஊடக தர்மத்தை மிக சிறப்பாக செய்தனர் என்பதை அனைவரும் அறிந்ததே.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின்பு நடைப்பெற்ற வன்முறை குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று. நாடு முழுவதிலும் இருந்து 2093 பெண் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டு உள்ளனர். மேலும் தவறு செய்தவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.