எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்த பொழுது நீட் தேர்வு குறித்து மிக தவறான கருத்தினை மக்கள் மத்தியில் முன் வைத்தது. நாங்கள் ஆளும் கட்சியாக வந்தால். முதல் உத்தரவே நீட் தேர்வு ரத்தாக தான் இருக்கும் என்று தொடர்ந்து கூறி வந்தது.
ஆளும் கட்சியாக தி.மு.க மாறிய பொழுது, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம். பா.ஜ.க தலைவர் மத்திய அரசோடு பேசி நீட் இல்லை என்று அறிவித்தால் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டு உள்ளார். மத்திய அரசிடம் பேசி தடுப்பூசிகளை பெற்று தர வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவரிடம் அண்மையில் மா.சுப்பிரமணியம் வலியுறுத்தி இருந்தார். தொடர்ந்து பா.ஜ.க தலைவரிடம் உதவி கேட்பதற்கு பதில். ஆட்சி கலைத்து விட்டு பா.ஜ.கவிடமே ஆட்சியை ஒப்படைத்து விடலாமே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கிராமத்து மாணவர்களின் திறனை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். நீட் தேர்வில் விலக்கு கேட்பது அவமானமாக இல்லையா? என்று நீதிபதி கிருபாகரன் 2017-ஆம் ஆண்டு தமிழக அரசிற்கு கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.