தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், அதிகரித்து வருவதாக நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், ஊடகங்களில் வரும் செய்திகளையும் வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
அதுவும் குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருக்கும் பொழுது இது போன்ற கொடூர குற்றச்செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது என்பது மக்களின் உள்உணர்வாக இருந்து வருகிறது.
சாதாரண பெண்களுக்கு மட்டுமில்லாமல் பெயர், புகழ், பணம், அதிகாரம், என அனைத்தும் இருந்த பெண்களுக்கும் இதுபோன்ற கொடூர அனுபவங்கள், இருந்திருக்கிறது. தமிழக சட்டசபையில் 1989-ஆம் ஆண்டு மார்ச் 23 -ஆம் தேதி செல்வி. ஜெயலலிதாவின் சேலை கிழிப்பு, அவமதிப்பே அதற்கு சிறந்த சான்று.
என்ன நடந்தது?
எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஆட்சியை பிடித்த, தி.மு.க அரசு தனது முதல் பட்ஜெட்டை சட்ட சபையில் மார்ச் 25-ஆம் தேதி அப்பொழுதைய முதல்வரும், நிதியமைச்சருமான கலைஞர் தாக்கல் செய்தார். அப்பொழுது, ‘பட்ஜெட்டை தாக்கல் செய்யக் கூடாது’ என்று அ.தி.மு.க மற்றும் ஜெயலலிதா தரப்பில் இருந்து மிக கடுமையான எதிர்ப்பு குரல் கிளம்பியது.
தன்னுடைய போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் ‘அதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என்று உரிமை மீறல் பிரச்னையை எழுப்பினார் செல்வி ஜெயலலிதா. அப்போது நிகழ்ந்த குழப்பத்தில், ஜெயலலிதா அவர்களின் சேலை கிழிந்தது. சட்ட சபை போர்களம் போல அமளி துமளி ஆனது. இச்சம்பவம் தமிழகத்திற்கு மிகப் பெரிய தலை குனிவை ஏற்படுத்தி விட்டது என்பது மிகவும் கசப்பான உண்மை. இது ஒரு சம்பவம் மட்டுமல்ல பல சம்பவங்களின் ஓர் உதாரணம் ஆகும்.
பெண்களை தெய்வமாகவும், பிறந்த தேசத்தையே தாயாக பார்க்கும் பழக்கம் உடைய நம் மக்களை இதுபோன்ற காரியங்களில் ஈடுபட வைப்பது, சரியான ஆன்மீக கல்வி இல்லாததே இதற்கு காரணமாக இருந்து வருகிறது.