Share it if you like it
ராஜஸ்தான்: பிக்கானீரைச் சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் என்பவர் ராஜஸ்தான், பொக்ரான் பகுதியில் காய்கறி விற்பனை செய்வது போல் இந்திய ராணுவத்தை உளவு பார்த்த விவகாரம் வெளியாகி உள்ளது. அவர் நீண்ட நாட்களாக இந்தியா ராணுவத்திற்கு காய்கறி சப்லை செய்து வருகிறார். பாகிஸ்தானுடன் ரஹ்மானுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததையடுத்து ரஹ்மானை விசாரித்ததில் அவருக்கு ISI யுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் அவரிடம் இருந்து இராணுவத்தின் ரகசிய ஆவணங்கள் மற்றும் இராணுவப் பகுதியின் வரைப்படம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆவணங்களை அவருக்கு ஆக்ராவில் பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ வீரர் பரம்ஜித் கவுரால் என்பவர் வழங்கியது தெரியவந்துள்ளது.
Share it if you like it