36,000 மின் கட்டணமா? தற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளியின் மனைவி..!

36,000 மின் கட்டணமா? தற்கொலைக்கு முயன்ற கூலித் தொழிலாளியின் மனைவி..!

Share it if you like it

ஆட்சிக்கு வந்தால் விடியல் தருவோம் என்று கூறிய தி.மு.க அரசு, பல சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பினையும் மீறி மதுக்கடைகளின் மூலம் மக்களிடம் இருந்து பணத்தை பறிப்பது ஒருபக்கம் என்றால், Additional Deposit (ACCD) என்கின்ற வகையில் மற்றொரு பக்கம் அதிக கட்டணம் வசூல் செய்வதில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

தமிழகத்தில் தொடர் மின்வெட்டால் ஏற்கனவே பலரின் தொழில்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வருமானமின்றி கூலி தொழிலாளிகள், ஏழை, எளியவர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்கள் கடும் இன்னலை இன்று வரை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு மேலும் மன அழுத்தம் தரும் வகையில் தி.மு.க அரசு அதிக மின் கட்டணம் வசூல் செய்வதாக பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மாதவரம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கவுதமன் என்னும் கூலித்தொழிலாளியின் வீட்டிற்கான மின் கட்டணமாக ரூபாய் 36,000 செலுத்த வேண்டுமென, கவுதமன் மனைவி கருமாரியிடம் மாதவரம் மின் வாரியம் தெரிவித்து உள்ளது. இதனை அடுத்து கடும் அதிர்ச்சியடைந்த அவர் மன உளைச்சல் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை முயற்சியில் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image

 


Share it if you like it