புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுகவிற்கு கிடைக்க வேண்டிய ஊராட்சி குழுத்தலைவர் பதவியை கிழவியிடம் இருந்த வடையை காகம் சுட்டதுப்போல் அதிமுக அப்பதவியை பெற்றுவிட்டது. மொத்தம் உள்ள 22 ஊராட்சிக் குழு உறுப்பினர்களில் திமுக கூட்டணி 13 இடங்களிலும். அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது. எப்படியோ தலைவர் பதவி நமக்கு தான் என்று தூங்க போன திமுகாவிற்கு (வீரபாகு) நிலை ஏற்பட்டிருப்பது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஊராட்சி குழுத்தலைவர் பதவி திமுகவிற்கும், துனண தலைவர் பதவி தனக்கு வேண்டுமென காங்கிரஸ் கோரியது. இதற்கு அக்கட்சி சங்கு ஊதி வழி அனுப்பிவிட்டது. இதனால் அஞ்சா சிங்கம் மருகு பாண்டிப்போல் முடிவெடுத்து ஆளும்கட்சியின் டீலிங்கிற்கு, ஆசைப்பட்டு துனணத்தலைவர் பதவியை காங்கிரஸ் பெற்றுவிட்டது. இந்நிலையில் பதவி வெறி மனிதனை எப்படி எல்லாம் திசைமாற்றுகிறது நேர்மையானவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நடுநிலையாளர்கள் தங்கள் கருத்தை கூறியுள்ளனர்.