10 ஆம் வகுப்புவரை மராத்தி கட்டாயம்-துணை முதல் மந்திரி அஜித்பவார் !

10 ஆம் வகுப்புவரை மராத்தி கட்டாயம்-துணை முதல் மந்திரி அஜித்பவார் !

Share it if you like it

மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு அவரது சொந்த ஊரான பாராமதியில் பாராட்டு விழா நடந்தது. இதில் அஜித்பவார் ,ஆங்கில வழி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. அவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்கள்.

ஆனால் மராத்தியை அவர்களுக்கு சரியாக எழுதவும், வாசிக்கவும் தெரியவில்லை. நாம் மராட்டியத்தில் வாழ்கிறோம். எனவே ஒவ்வொருவருக்கும் மராத்தியை சரியாக எழுதவும், வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

இதற்கு விரைவில் தீர்வு காண போகிறோம். உருது, இந்தி, ஆங்கில வழி என அனைத்து பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மராத்தி கட்டாயமாக்கப்பட வேண்டும். இதை மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது.


Share it if you like it