கத்தோலிக்க தம்பதிகள் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொண்டால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை..! 

கத்தோலிக்க தம்பதிகள் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொண்டால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை..! 

Share it if you like it

கேரளாவில் உள்ள சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் சார்பில், ‘குடும்ப ஆண்டு’ கடைபிடிக்கப்படுகிறது. இதனை அடுத்து பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கல்லரங்காட் அனைத்து தேவாலயங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார் அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

‘பாலா மறைமாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களில், 5 மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். அத்தம்பதிகளின் குழந்தைகளுக்கு மறைமாவட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும், மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் வழங்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 


Share it if you like it