மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது என்ற பாடத்தை தி.மு.க இப்பொழுதாவது கற்றுக் கொண்டதே – ஷியாம் கிருஷ்ணசாமி கிண்டல்..!

மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது என்ற பாடத்தை தி.மு.க இப்பொழுதாவது கற்றுக் கொண்டதே – ஷியாம் கிருஷ்ணசாமி கிண்டல்..!

Share it if you like it

ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கிய . ஆட்சிக்கு வந்த பின் கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இது குறித்து யாராவது கேள்வி எழுப்பி விடுவார்களோ என்ற அச்சத்தில் ஒன்றிய அரசு, அணில் கதை, ஜெய் ஹிந்த் கதை, என்று மக்களின் கவனத்தை திசை திருப்பி வருவதாக பலர் விடியல் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில்.

புதிய தமிழகம் கட்சி’யின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள் தி.மு.க அரசுக்கு எதிராக தனது கருத்தினை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

  • ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து செய்யப்படும், பெட்ரோல் – டீசல் விலை GST வளையத்திற்குள் கொண்டு வரப்படும், லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும்; தமிழகத்திற்கான நிலுவைத் தொகை 18,000 கோடி பெற்றுத் தரப்படும் போன்ற கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை.
  • முதல்வரான பின் பல்வேறு கோரிக்கைகளோடு பிரதமரைச் சந்திக்க சென்ற ஸ்டாலின், வெறும் கையோடு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆட்சி செய்ய முடியாது என்ற பாடத்தை நன்கு கற்றுக் கொண்டார்கள்! அதன் விளைவே இல்லாத நூற்றாண்டுக்கு ஒரு விழாவும் கொண்டாட்டமும்!
  • சட்டமன்றத்தில் அண்ணாதுரை படம் திறக்க இந்திரா காந்தி வந்தாராம், கருணாநிதி படம் திறக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தே வந்தாராம்… பெருமை பட்டுக்கொள்ளும் திமுகவினர்! இப்படி இந்திய தேசிய தலைவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்கி கிடக்கும் தாழ்வு மனப்பான்மைய மறைக்கத்தான் ஒன்றிய அரசு கூப்பாடா?!


Share it if you like it