வாரத்தில் 7 நாட்களும் கோவிலை திறக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் மிகப் பெரிய மக்கள் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்று இருந்தார். இந்நிலையில் தமிழக தொழிலாளர்களின் வாழ்வு சிறக்க, தீபாவளிக்கு மக்கள் பட்டாசு வெடித்து மகிழ இடையூறுகள் ஏற்படுத்த வேண்டாம்’ என, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், பா.ஜ.,க தலைவர் அண்ணாமலை அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது
:தமிழகத்தில், எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பட்டாசு உற்பத்தியிலும்; ஏழு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பட்டாசு வினியோகத்திலும் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு தொழில், தென் மாவட்டங்களின் வாழ்வாதாரம். இந்தியாவின் 90% சதவீத பட்டாசுகள், இங்கு தான் தயாரிக்கப்படுகின்றன
கொரோனா பாதிப்பில் மக்கள் துயருற்ற நிலையில், தன் நாட்டு மக்கள் இந்த சோர்விலிருந்து மீள, ஜப்பான் நாடு, பட்டாசு திருவிழாவை நடத்தி மக்களுக்கு உற்சாகம் அளித்தது. பட்டாசு வெடித்தல் என்பது தீபாவளி பண்டிகையின் ஒரு அங்கம். கொரோனா பாதிப்பில் இருந்து தேசம் மீண்டெழும் நிலையில், மக்களை உற்சாகப்படுத்த, தங்கள் மாநிலத்தில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ, எந்த ஒரு இடையூறும் ஏற்படுத்த வேண்டாம் என்று அக்கடிதத்தில் கூறியுள்ளார். தமிழக பா.ஜ.க தலைவரின் இந்த முயற்சிக்கும் நிச்சயம் வெற்றி கிட்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நன்றி தினமலர்..