நீ தான் சங்கி இல்ல நீ தான் சங்கி DMK Vs NTK டுவிட்டரில் பெரும் ரகளை..!

நீ தான் சங்கி இல்ல நீ தான் சங்கி DMK Vs NTK டுவிட்டரில் பெரும் ரகளை..!

Share it if you like it

ஊழல்வாதி!
லஞ்சப்பேர்வழி
தமிழின துரோகி!
கட்டப் பஞ்சாயத்து!
பொய்யன், புளுகன் ஓசிச்சோறு!
கொள்ள கோஷ்டி
துரோகக் கும்பல்!
மாஃபியா!
வேடதாரி இந்த வார்த்தைகளை விட ‘சங்கி’ என்ற வார்த்தை சிறந்த வார்த்தை தான்! என்று அண்மையில் பிரபல இயக்குனர் பேரரசு கருத்து தெரிவித்து இருந்தார்..

அதே போன்று சூரப்பாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்த பிரபல நடிகர் கமல் அவர்களையும் சங்கி என்றும், பி டீம் என்றும், அழைத்த நபர்களுக்கு மரண பதிலடியை இவ்வாறு வழங்கி இருந்தார் நடிகர் கமல்..

அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை. திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா? தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத் தான் நான் பி டீம். ஆறு வயதிலிருந்தே நான் ஏ டீம் என்பதை ஏ1 ஊழல் புத்திரர்களுக்கு உறைக்கும்படி சொல்கிறேன் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

திரைப்பட இயக்குனர் பேரரசு மற்றும் நடிகர் கமல் ’சங்கி’ என்பதற்கு விளக்கம கூறியிருந்த நிலையில். நாம் தமிழர் கட்சி மற்றும் தி.மு.க-வினர் இடையே சீமான் தான் சங்கி என்றும் ஸ்டாலின் தான் உண்மையான சங்கி என்றும் டுவிட்டரில் பெரும் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். .


Share it if you like it