மரணம் அடைந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபர்களுக்கு இரங்கல் தெரிவிக்காமல்  கொடிக்கம்பத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திருமா..!

மரணம் அடைந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த நபர்களுக்கு இரங்கல் தெரிவிக்காமல் கொடிக்கம்பத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் திருமா..!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வராக சரஞ்சித் சன்னி என்பவரை அண்மையில் அக்கட்சி நியமனம் செய்தது. 2018 – ஆம் ஆண்டு பெண் IAS அதிகாரிக்கு ஆபாச SMS அனுப்பியவருக்கு முதல்வர் பதவியா? என்று பெண் சமூக ஆர்வலர்கள் முதல் பொதுமக்கள் வரை பலர் தங்களின் கடும் கண்டனத்தை பஞ்சாப் முதல்வருக்கு தெரிவித்து இருந்தனர்.

ஆனால் அதனை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் வி.சி.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர் திருமாவளன் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட சரஞ்சித் சன்னி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார். அண்மையில் தமிழக முதல்வர் வீட்டு முன்பு பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவர் தீ குளித்து மரணம் அடைந்ததற்கு தனது எதிர்ப்பையோ, ஆறுதலையோ, தெரிவிக்காமல் மெளனம்.

அண்மையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சீக்கியர் ஒருவரை விவசாயிகள் என்னும் போர்வையில் உள்ள, பிரிவினை தூண்டும் பயங்கரவாதிகள் கை, கால்களை, வெட்டி மிக கொடூரமாக கொன்றதற்கு கண்டனம் தெரிவிக்காமல் கொடி கம்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசி வருவதன் மூலம் இவரின் உண்மையான சுயரூபத்தை அப்பாவி பட்டியல் சமூக இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Image
Image

Terrorist Bhindranwale’s poster behind the body.


Share it if you like it