பாஜக பொதுக்குழு உறுப்பினர் கல்யாணராமனை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்வது பற்றி கேட்க சென்ற பெண் நிர்வாகி சுமதி வெங்கடேஷிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார். இது பற்றிய வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக நிர்வாகியிடம் காவல்துறை அதிகாரி ஒருவர் தவறாக நடந்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது புகார் அளிக்கப்படும் என கூறியிருந்தார். அதனை தொடர்ந்து இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கட் வழக்கறிஞர் பிரிவுகள் உடன் சென்று புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி கதிர் நியூஸ்