தி.மு.கவை சேர்ந்த கழக கண்மணிகள் பட்டபகலில் பெண்ணின் சேலையை உருவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தை குறித்து விவரிக்கிறது இத்தொகுப்பு.
தி.மு.க ஆட்சியில் அமர்ந்த நாளில் இருந்தே சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வருவதை தமிழக மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பொதுமக்கள் உட்பட மாற்று கட்சியை சேர்ந்த பெண்கள் வரை பலரின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக விடியல் ஆட்சியில் மாறியுள்ளது என்பது நிதர்சனம்.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் புளியரை ஊராட்சிமன்ற துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற இருந்தது இதில் பிரபல கட்சியை சேர்ந்த பெண் உறுப்பினர் கலந்து கொள்ள இருந்த நிலையில், அவரின் புடைவையை பிடித்து இழுத்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் உடனே குரல் கொடுப்போம் என்று தம்மை போராளிகள் போல் காட்டி கொள்ளும் கனிமொழி, ஜோதிமணி, சுந்தவள்ளி போன்றவர்கள் பெண் சேலையை உருவிய திமுகவினருக்கு எதிராக குரல் கொடுக்காமல் இன்று வரை கள்ள மெளனம் காத்து வருவது மக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில். பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்கள் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக-வினரின் காணொலியை டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து தனது கோவத்தை வெளிப்படுத்தி உள்ளார்.