ஹிந்துக்கள் புனிதமாக வணங்கி வழிபடும் கடவுள்களில் ராமரும் ஒருவர். கோடிகணக்கான பக்தர்கள் ராமரை இன்றும் தங்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அவர் வாழ்ந்த காலத்தில் ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தை ஹிந்துக்கள் இன்றும் புனித இடமாக கருதி வருகின்றனர். ஆனால் இதனை தி.க, வி.சி.க, தி.மு.க, மற்றும் பிரிவினை சக்திகள் மற்றும் போலி அரசியல்வாதிகள் அது ராமர் பாலம் அல்ல, ராமர் எந்த கல்லூரியில் படித்து விட்டு வந்து அந்த பாலத்தை கட்டினார் என்று அப்பொழுதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் விமர்சனம் செய்து பேசி இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
அது ராமர் பாலம் அல்ல அது வெறும் மண்மேடு என்று ஒருபடி மேலே சென்று வீரமணி கோஷ்டி தொடர்ந்து மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரத்தை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா அவர்கள் ராமர் பாலத்தின் வரலாற்றை திரித்தும் விநாயகரின் தீவிர பக்தருமான ஔவை பாட்டி குறித்தும் பேசிய காணொலி மக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.