Share it if you like it
- தேசிய மாணவர் படையின் வருடாந்திர பேரணி நேற்று (ஜனவரி 28) டெல்லியில் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு, சாகசங்கள் நடைபெற்றன. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி பேசினார்.
- சில கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக குடியுரிமை (திருத்த) சட்டத்தை எதிர்க்கின்றன. புதிய சட்டத்தை எதிர்ப்பதன் மூலம், இந்த கட்சிகள் தலித்துகள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட பிரிவுகளை எதிர்க்கின்றன. பாகிஸ்தானில் துன்புறுத்தப்படுவர்கள், பாகிஸ்தானிலிருந்து வந்தவர்களில் பெரும்பாலோர் அத்தகைய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்” என்றார். மேலும் அவர் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் குறித்தும் கவலைப்பட வேண்டாமா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- “பாகிஸ்தான் நம்மோடு மூன்று போர்கள் நடத்தி தோற்றுவிட்டது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து நிழல் போர்களை நடத்தி வருகிறது. நம் நாட்டின் முந்தைய அரசுகள் தங்கள் செயலற்ற தன்மை காரணமாக பாகிஸ்தானின் நிழல் போரை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவே கருதினர். ஏதேனும் நடவடிக்கை எடுக்க அனுமதி தருமாறு நமது ராணுவம் கேட்டால் கூட அவர்கள் அனுமதி அளிக்க மாட்டார்கள். ஆனால், தற்போது பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க இந்திய படைகளுக்கு ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு மேல் தேவைப்படாது” என்று பேசினார்.
நமது இராணுவத்தில் பல ஆண்டுகளாக புதிய போர் விமானங்கள் வாங்கப்படவில்லை. ஆனால் இப்போது நம்மிடம் புதிய போர் விமானமான ரஃபேல் உள்ளது” என்றார்.
Share it if you like it