விடிய விடிய மது குடித்து மூன்று பேர் உயிர் இழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் விடிய விடிய மது அருந்திய பார்த்திபன், சக்தி வேல், முருகானந்தம், ஆகிய மூன்று பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது இது குறித்த செய்தியை பிரபல ஊடகம் பாலிமர் செய்தி ஆக வெளியிட்டு உள்ளது.
மதுவிற்கு அடிமையாகி தினம் தினம் ஏதேனும் ஒரு துயர சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் பாப்பான்குளம் அருகே மதுகுடித்த தந்தையை திருத்த விஷம் குடித்து மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஆனால் இது குறித்து எந்த ஒரு முன்கள ஊடகமும், குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று பேசி வரும் நபர்களும் இன்று வரை கப்சிப் என்பது நிதர்சனம்.
ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் பூரண மது விலக்கு உண்டு என்று கூறிய கனிமொழி, உதயநிதி, முன்னாள் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட யாரும் இந்த துயர சம்பவம் குறித்து வாய் திறக்காமல் கள்ள மெளனம். தி.மு.க அரசு காலம் தாழ்த்தாமல் உடனே எதிர்கால இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.