விலை நிலத்தில் சிமெண்ட் ரோடு அமைத்து விவசாயிகளின் குறை கேட்ட முதல்வருக்கு வலுக்கும் எதிர்ப்பு.
சமீபத்தில் பெய்த கனமழையில் விவசாயிகளின் நிலங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டதை அடுத்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து. அவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசின் மூலம் பெற்று தருவேன் என வாக்குறுதி அளித்தார்.
அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ள நீரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்ற பொழுது, விளை நிலத்தில் சிமெண்ட் சாலை அமைத்து விவசாயிகளை சந்தித்து இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இருந்த பொழுது இதே போன்ற சர்ச்சையில் சிக்கி இருந்தார் விளம்பர முதல்வர்.
வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமக்கு, விளம்பரத்தை தேடும் தமிழக முதல்வர் ஸ்டாலின், துளியும் எந்தவித ஆடம்பரமின்றி மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வரும் வாழும் காமராஜர் எம்.ஆர். காந்தியை பார்த்தாவது தம்மை திருத்தி கொள்ள வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.