தி.மு.க கூட்டணியில் இருந்து முஸ்லீம் கட்சிகள் அனைத்தும் வெளியேற வேண்டும் என திருமாவின் நெருங்கிய நண்பர் வேண்டுகோள்.
சிறையில் உள்ள ஆயுள் கைதிகள் குறித்து தமி.ழக அரசு எடுத்த முடிவிற்கு உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற பாபநாசம் சட்ட உறுப்பினர் ஜவாஹிருல்லா தனது அதிருப்தியை அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் திருமாவளவனின் நெருங்கிய நண்பரும் பிரபல ஆபாச பேச்சாளருமான தடா ஜெ ரஹிம், முஸ்லிம் கட்சிகள் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று தனது எண்ணத்தை டுவிட்டரில் வெளிப்படுத்தி உள்ளார்.
பா.ஜ.க, மத்திய அரசு, மோடி, என்றால் உடனே கருத்து தெரிவிக்கும் வி.சி.க கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்.எல்.ஏ-வுமான ஆளூர் ஷாநவாஸ் தடா ஜெ ரஹிமின் சொல்லிற்கு கட்டுப்பட்டு தி.மு.க கூட்டணியை விட்டு உடனே வெளியேற வேண்டும் என திருமாவை வற்புறுத்துவாரா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.