கேரளா, பாலக்காடு பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.,பொறுப்பாளர் சஞ்சீத் என்பவர் கடந்த நவ.15ம் தேதி தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த மர்மக்கும்பல் இவர் மீது மோதினர். இதனால் கீழே சரிந்த சஞ்சீத்தை காரில் வந்த நபர்கள் சரமாரியாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் சஞ்சீத்தின் உயிர் அவரது மனைவியின் கண்முன்னே பிரிந்தது.
இவ்விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தனர். இதனை தொடர்ந்து தீவிர விசரணையில் இறங்கிய காவல் துறையினர் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா (PFI) என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். சில சட்ட நடவடிக்கைகளுக்காக அவரது பெயரை வெளியிடமுடியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளது.
கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவில் மாற்று சித்தாந்தங்களை சேர்ந்த சுமார் 120 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதிலும் PFI அமைப்பிற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு அலை உருவாகி பல மாநிலங்களில் அவ்வமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசும் அந்த அமைப்பை தடை செய்ய பரிசீலித்து வரும் நிலையில். தங்களை ஏதோ கருத்து சுதந்திர போராளிகளை போல் காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்டுகள். கேரளாவில் PFI அமைப்பை தடை செய்வார்களா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.