பா.ஜ.க என்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறேன் என்று கூறியதாக வி.சி.க தலைவர் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தம்பிகள், தங்கைகள், வேறு கட்சிகளுக்கு ஓடி விடாமல் இருப்பதற்காக. சீமான் அளந்து விடும் கதைகள், பொய்களை, தமிழக மக்கள் தொடர்ந்து சகித்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர் என்பது நிதர்சனம். உலக தலைவர் பாரதப் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்காமல் பலர் தவம் கிடந்து வரும் நிலையில் தம்மை சந்திக்க பிரதமர் தூது விட்டதாக சமீபத்தில் சீமான் கூறிய கதை மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருந்தது.
மக்கள் நல கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள் உங்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறேன் என பா.ஜ.க தம்மிடம் கூறியதாக சீமானையே ஓவர் டேக் செய்யும் விதமாக வி.சி.க கட்சியின் தலைவர் திருமாவளவன் அளந்து விட்ட கதை நகைச்சுவையின் உச்சம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.