CPIM கட்சியை சேர்ந்த மதுரை எம்பி வெங்கடேசனை ஒருமையில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு.
CPIM கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களை, தி.மு.க-வின் நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு சமீபத்தில் ஒருமையில் பேசியது கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இது குறித்து வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெளனமாக பல தோழர்கள் இருந்து வந்தனர்
இந்நிலையில், CPI(M), கட்சியின் மாநிலக்குழு செயலாளர் கே. பால கிருஷ்ணன் அவர்கள் தனது உணர்வை டுவிட்டரில் இவ்வாறு வெளிப்படுத்தி இருந்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பான ஊடகங்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், தோழர் சு.வெங்கடேசன் எம்.பி. குறித்து ஒருமையில் பேசியிருப்பது அரசியல் நாகரீகமற்றது. பொதுவாழ்வில் இருப்போர் நிதானத்துடன் பேசுவதையே மக்கள் விரும்புவார்கள், ஏற்பார்கள்
இதனை தொடர்ந்து அமைச்சர் வருத்தமோ, மன்னிப்போ, கேட்பார் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கே. என். நேரு அவர்களின் டுவிட்டர் பதிவு கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களை மீண்டும் அவமதிப்பது போல் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சரின் டுவிட்டர் பதிவு.
பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்.