உதயநிதியின் பிறந்த நாளை கொண்டாடுவது ஒரு சமூக தொண்டு அமைச்சர் கருத்து.
கல்லுக்கும் உங்களுக்கும் என்ன உறவோ தெரியவில்லை. உங்களின் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்டி போட்டது தமிழ் திரை உலகை. ஒரே ஒரு செங்கல் புரட்டி போட்டது ஆட்சி அதிகாரத்தை..! முன்பெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போனால் தோனி வந்தால் தான் கூட்டம் வரும். இப்ப நம்ம அருமை சகோதரர் உதயநிதி வந்தாலே கூட்டம் வருகிறது, என்று சமீபத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மக்கள் பிரச்சனையை குறித்து பேசாமல் சட்ட சபையில் உதயநிதியை புகழ்ந்து பேசியது மக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தி இருந்தது.
இச்சூழ்நிலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு அவர்கள் பிரச்சார பீரங்கி உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது ஒரு சமூக தொண்டு என்று பேசியிருப்பது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலையை உருவாக்கியுள்ளது.