Share it if you like it
பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஓட்டெடுப்புக்கு முன்னதாக மசோதா மீது உணர்ச்சிகரமான விவாதம் நடந்தது. இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய உறுப்பினர்கள் சிலர் கண் கலங்கியவாறு பேசினர்.
அப்போது, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் இங்கிலாந்துக்கு பல்வேறு உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதே சமயம், இங்கிலாந்தின் எதிர்கால உறவுகள், வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆகியவை குறித்து சில உறுப்பினர்கள் எச்சரித்தனர். அதனை தொடர்ந்து, ஓட்டெடுப்பு நடந்தது. ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 621 உறுப்பினர்களும், எதிராக 49 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் நீண்ட இழுபறிக்கு பின் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளது.
Share it if you like it