ராகுல் காந்தி மீது பிரபல தேர்தல் வியூக நிபுணர் கடும் தாக்கு..!

ராகுல் காந்தி மீது பிரபல தேர்தல் வியூக நிபுணர் கடும் தாக்கு..!

Share it if you like it

கடந்த 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.கவிடம் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து அதற்கு முழு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி. கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் மாற்று கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இன்று வரை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் வழக்கம் போல மத்திய அரசு மீது உண்மைக்கு புறம்பாக பேசுவது, வீண் விளம்பரம் என்ற பெயரில் நாடகம் நடத்துவது என தொடர்ந்து ராகுல் காந்தி செயல்பட்டு கொண்டு இருந்தால் இது கட்சியின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருக்கும் என பல அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள்,  உட்பட பலர் ராகுல் காந்திக்கு தொடர்ந்து அறிவுரை வழங்கி வருவதை பத்திரிக்கைகள், ஊடகங்கள், வாயிலாக அனைவரும் அறிந்து இருப்போம்.

இந்த நிலையில் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் சந்தித்த தேர்தல்களில் 90% சதவீத தோல்வியை ராகுல் காந்தி சந்தித்துள்ளார். கட்சியின் தலைமை பொறுப்பு என்பது தனக்கான தனிப்பட்ட உரிமையாக அவர் கருதுகிறார். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்து ஐனநாயக முறையில் தீர்மானிக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்து உள்ளார்.


Share it if you like it