கோவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அண்ணாமலை குரல் தொழிற்பேட்டை நிறுத்தி வைப்பு.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் 3,832 ஏக்கர் விவசாய நிலத்தை, தி.மு.க அரசு கையகப்படுத்தல் பணியில் தீவிரம் காட்ட துவங்கியதை அடுத்து, அங்குள்ள விவசாய பெருமக்கள் தங்கள் கடும் எதிர்ப்பினை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். பா.ஜ.க-வை தவிர எந்த ஒரு அரசியல் கட்சியும் விவசாயிகளுக்கு ஆதராக குரல் கொடுக்க முன்வரவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் தி.மு.கவிற்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மிக கடுமையான கண்டனங்களையும், போராட்டம் வெடிக்கும், என விவசாயிகளின் குரலாகவே தி.மு.க அரசிற்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதனை தொடர்ந்து தொழிற்பேட்டை அமைக்கும் முடிவினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அரசு தெரிவித்து இருப்பது கோவை விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், இத்திட்டம் நிரந்தரமாக நடைமுறைக்கு வரக்கூடாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.