பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் கொண்டு வரும் இது இஸ்லாமியர்களுக்கு ஆபத்து என சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த இஸ்லாமிய தலைவர் கூறி இருப்பது இந்திய மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஒன்றான உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் தற்பொழுது ஆட்சி நடைப்பெற்று வருகிறது. அகிலேஷ் யாதவ் தலைமையில் செயல்பட்டு கொண்டு இருக்கும் சமாஜ்வாடி கட்சி, எதிர்க்கட்சியாக உள்ளது. இக்கட்சியை சேர்ந்த மூத்த முஸ்லீம் தலைவர் எஸ்.டி.ஹாசன் அவர்கள் அண்மையில் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார்.
ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் (யுசிசி) குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தியதுடன் வரும் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால், இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் இரண்டாவது திருமணம் செய்வதைத் தடுக்கும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்படும். பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டும் என்பது தான் நமது ஒரே ஒரு நோக்கமாக இருக்க வேண்டும்’ என்று உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நமது பெண் குழந்தைகளுக்கும் நாம் விரும்பிய படி திருமணம் செய்ய முடியாது. ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால், இது முஸ்லீம்களின் தனிப்பட்ட சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், இரண்டு முறை திருமணம் செய்ய முடியாது” என்று பேசியுள்ளார்.
/https://www.opindia.com/2021/12/sp-leader-st-hasan-up-election-uniform-civil-code-ucc-allah-bjp/