தி.மு.க.வின் பொய் வாக்குறுதிகள்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

தி.மு.க.வின் பொய் வாக்குறுதிகள்: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

Share it if you like it

தி.மு.க. தலைவர்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதில் வல்லவர்கள் என்பதை மையப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

தி.மு.க.வை பொறுத்தவரை சொல்வது ஒன்று செய்வது ஒன்றாகத்தான் இருக்கும் என்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததுதான். இது இன்று நேற்றல்ல, காலம்காலமாக இதுதான் நடந்து வருகிறது. உதாரணமாக, 2006 சட்டமன்றத் தேர்தலை எடுத்துக்கொள்வோம். தமிழகத்தைப் பொறுத்தவரை விவசாய பெருமக்களும், விவசாயக் கூலித்தொழிலாளர்களும்தான் அதிகம். ஆகவே, அ.தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக, நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சிக்கும் வந்து விட்டது. ஆனால், நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதா என்றால் இல்லை என்பதுதான் பதிலாகக் கிடைக்கும்.

அதேபோல, நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், பெண்களின் ஓட்டுக்களை குறிவைத்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதன்படி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தலா ரூ.100 வீதம் மானியம் வழங்கப்படும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். ஆனால், மேற்கண்ட முக்கியமான 3 வாக்குறுதிகளுமே நிறைவேற்றப்படவில்லை. இதனால், பெண்கள் தி.மு.க. அரசு மீது கடும் அதிருப்தி மற்றும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இது நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது நன்றாகவே எதிரொலித்தது. தி.மு.க. தலைவர்கள் பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம், 1,000 ரூபாய் என்னாச்சு என்று கேட்டு, பெண்கள் குடைச்சலை கொடுத்தனர்.

இந்த நிலையில்தான், தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பதில் வல்லவர்கள். கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாட்டார்கள் என்கிற ரீதியில் வெளுத்து வாங்கி வருகின்றனர் நெட்டிசன்கள்.


Share it if you like it