ஹிஜாப் இஸ்லாத்தின் அத்தியாவசிய நடைமுறை அல்ல என்று கர்நாடக மாநில ஐகோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறது. இதன் மூலம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.
கர்நாடக மாநிலம் உடுப்பியிலுள்ள பி.யூ, கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள், கடந்த ஜனவரி மாதம் முதல் திடீரென ஹிஜாப், பர்தா, புர்கா ஆகிவற்றை அணிந்து வரத் தொடங்கினர். இதற்கு, கல்வி நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனால், கல்வி நிறுவனங்களின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர் அடிப்படைவாத அமைப்பினர். இதையடுத்து, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதித்தால், நாங்களும் காவித்துண்டு, காவி ஷால் அணிந்து வருவோம் என்று சொல்லி, ஹிந்து மாணவ, மாணவிகள் போர்க்கொடி தூக்கினர்.
இதைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப், பர்தா, புர்கா அணிய தடைவிதித்தது கர்நாடக மாநில அரசு. இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியது. இதன் காரணமாக, இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் நிலவியது. இதன் தொடர்ச்சியாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த மாநில அரசு, 144 தடை உத்தரவையும் பிறப்பித்தது. இதனிடையே, ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் அடிப்படைவாத அமைப்பினர். இந்த வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கின் இறுதித்தீர்ப்பு வரும்வரை மாணவ, மாணவிகள் யாரும் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான உடைகளை அணியக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
ஆனாலும், மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டபோது, இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் மறுபடியும் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்தே வந்தனர். அம்மாணவிகளை கல்வி நிறுவனங்களுக்குள் நுழைய அனுமதி மறுத்துவிட்டன நிர்வாகங்கள். இதனால், ஆத்தரமடைந்த அடிப்படைவாதிகள் கல்வி நிறுவன ஆசிரியர்கள், முதல்வர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், கல்வி நிறுவனங்கள் உறுதியாக இருந்ததால் அடப்படைவாதிகளால் எதுவும் செய்ய முடியவில்லை.
இந்த நிலையில்தான், அடிப்படைவாத அமைப்பினர் தொடர்ந்த வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும். மேலும், சீருடை விதிக்கும் உரிமை கல்வி நிறுவனங்களுக்கு உண்டு. தவிர, ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசிய விஷயம் அல்ல என்று அதிரடியாக தீர்ப்பளித்திருக்கிறார்கள். இதன் மூலம், ஹிஜாப் இஸ்லாமியர்களின் முக்கியக் கடமை. அரசியலமைப்பு சட்டப்படி எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று அறைகூவல் விடுத்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.