கடந்த 2018 ஆண்டு மத்திய பிரதேசத்தில் நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பத்து நாட்களில் ” விவசாய கடனை தள்ளுபடி செய்வோம் அப்படி செய்யவில்லை என்றால் என் கட்சி முதல்வரை மாற்றுவதாக பேரணியில் கலந்துக்கொண்ட மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.
காங்கிரஸ் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ராகுல் காந்தி என் கட்சி செய்யும் என மீண்டும் கூறி விட்டு டெல்லிக்கு பறந்தார். இரண்டு ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வரையும் மாற்றவில்லை, சொன்னபடி கடன் தள்ளுபடியும் செய்யவில்லை இதனை அடுத்து பொறுமையிழந்த விவசாயிகளின் தொடர் அழுத்தம் காரணமாக
அக்கட்சியின் பொது நிர்வாக அமைச்சர் கோவிந்த் சிங், மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் எங்களை மன்னியுங்கள், ராகுல் காந்தியின் கடன் தள்ளுபடி வாக்குறுதியை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை என்று கூறியிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் மத்திய பிரதேச மக்கள் மீண்டும் ராகுலை தொடர்பு கொண்டால் பொறுங்கள் கோவிந்த் சிங்கையே மாற்றி விடுகிறேன் என்று கூறுவாரோ என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.