ஆண்டுதோறும் மிக சிறப்பாக நடைபெறும் எருது விளையாட்டான கம்பாலா கர்நாடக மாநிலத்தில் மிகவும் புகழ் வாய்ந்த ஒன்றாக திகழ்கின்றது. இம்முறை அந்த போட்டியில் சீனிவாச கவுடா (28) என்னும் ஏழை கட்டுமான தொழிலாளி கலந்துக்கொண்டார்.
இதில் அவர் 145 மீட்டர் தூரத்தை கடக்க 13.62 வினாடிகலும், 100 மீட்டரை வெறும் 9.55 வினாடிகளில், கடந்து ஒட்டு மொத்த இந்தியாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துவிட்டார். ஏன்னெனில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.58 வினாடிகளில் உலக சாதனை படைத்த உசேன் போல்ட்டை விட கவுடாவின் நேரம் வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து பேசிய கவுடா உசைன் போல்ட்டுடன் என்னை ஒப்பிட வேண்டாம். அவர் ஒரு உலக சாம்பியன் நான் சாதாரண நெல் வயலில் மட்டுமே ஒடுகிறேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவரின் திறமையை பலரும் பாராட்டி இவரை போன்றவரை ஊக்குவிக்க வேண்டும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரேன் ரிஜிஜுயிடம் மக்கள் டுவிட்டரில் கேட்டுக்கொண்டனர்.
பல அரசியல் கட்சி பிரமுகர்களும் இவரின் திறமையை வெளிகொண்டு வர வேண்டும், இவர் நிச்சயம் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என தனிப்பட்ட முறையிலும் அமைச்சரிடம் வலியுறுத்தினர். இதனை அடுத்து விளையாட்டு துறை அமைச்சக அதிகாரிகள் இந்தியாவின் உசைன் போல்டை டெல்லி வருமாறும் சீனிவாச கவுடாக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று கூறியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.