Share it if you like it
- மதுரை,சிம்மக்கல் அருகே புராதன சிறப்புமிக்க காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்குள் பழமையான கல் மண்டபம் ஒன்று உள்ளது. கல் மண்டபம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய பயன்படுத்தப்பட்டு வந்தது.
- கல் மண்டபம் மற்றும் கோவில் சுற்றியும் உள்ள 30 சென்ட் நிலத்தை கடந்த 1998 க்கு பின் வாடகை ஒப்பந்தப்படி திமுக மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினரும்,மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான செ.போஸ் உட்பட 12 பேருக்கு வாடகைக்கு விடப்பட்டது.
- இந்நிலையில் கல் மண்டபத்தில் தடுப்பு சுவர் எழுப்பி, நவீனகழிப்பறைகள், குளியலறைகள் கட்டி செ.போஸ் கட்டணம் வசூலித்துள்ளார். கோவிலுக்கு செலுத்த வேண்டிய குறைந்தபட்ச வாடகையை கூட செலுத்தாமல் இருந்திருக்கிறார். இவரைப்போலவே வாடகைக்கு எடுத்த 11 பேரும் வாடகையை செலுத்தாமல் இருந்தனர். இதில் செ.போஸ் மட்டும் 22 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்திருந்தார்.
- இதனை எதிர்த்து கோவில் நிர்வாகம் நீதிமன்றத்தில் முறையிட்டது. கல் மண்டபம் மற்றும் கடைகளை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட பேரில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கல் மண்டபம் மற்றும் கடைகள் காலி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
- மேலும் கல் மண்டபத்தை புனரமைப்பு செய்து மீண்டும் கோவிலுடன் இணைத்து தர்ப்பணம் செய்ய பயன்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- செ.போஸ் உள்ளிட்டோரிடம் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்க அவர்களது சொத்துக்களை,நீதிமன்றம் மூலம் பறிமுதல் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it