பாரதிய ஜனதா கட்சி தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற சாத்ரா சன்சாட் என்னும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அகண்ட பாரதம் எப்பொழுது அமையும் என்று பார்வையாளரின் கேள்விக்கு அவர் இவ்வாறு கூறியுள்ளார். மெல்ல மெல்ல அகண்ட பாரதத்தை நோக்கி பயணித்து கொண்டு இருக்கிறோம்.
இந்தியாவில் அமைதியற்ற மாநிலமாக இருந்த காஷ்மீரில் 370 பிரிவை நீக்கி அங்கு அமைதியை நிலைநாட்டி உள்ளோம் இது அகண்ட பாரதத்தின் முதல் படி. மேலும் பாகிஸ்தான் பிடியில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு அதனை இந்தியாவுடன் இனணப்பதின் மூலம் அகண்ட பாரதம் அமையும் என்கின்ற நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக 1994 ஆம் ஆண்டு அந்நாட்டின் பிடியில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியா மீட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறி உள்ளது என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.