♦ தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணியாமல் எப்பொழுதும் விலை உயர்ந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் விலையுர்ந்த ஆடைகள் அணிவதையே விரும்பும் இவரா தமிழர்.
♦ தமிழர்களின் வாழ்வில் பசுவின் முக்கியத்துவத்தை உணர்த்திய வள்ளுவர்,வள்ளலார்,மற்றும் நம்மாழ்வார் போன்றவர்களின் பிள்ளை நான் என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்ளும் அதே சீமான் மாட்டு இறைச்சி உண்பேன் என்று போராட்டம் நடத்தியதன் மூலம் அவரின் சுயரூபம் வெளிவந்துள்ளது. சொல் ஒன்று செயல் ஒன்றாக இயங்கும் சீமான், இவரா தமிழர்.
♦ குமணன் தலையை கொய்து வருபவருக்கு தக்க பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தான் அரசனான தம்பி இதனை அறியாத புலவர் காட்டில் தலைமறைவாக இருந்த குமணனிடம் சென்று தன் வறுமையை நீக்குமாறு வேண்டி நின்றார். தமிழையே தன் உயிர் மூச்சாக நினைக்கும் அவனோ தன் கத்தியை உருவி புலவரிடம் கொடுத்து என் தலையை வெட்டி சென்று அரசனிடம் கொடுங்கள் உங்களுக்கு தக்க சன்மானம் வழங்குவான் என்று தலை வணங்கி நின்ற குமணன் மரபை சேர்ந்த நமக்கு தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அவர்களிடம் தமிழை காட்டி பணம் வசூலித்து பிழைக்கும் இவரா தமிழர்.
♦ சீமான் பிறந்தநாள் ஆகட்டும், மற்ற தம்பிமார்களின் பிறந்தாள் ஆகட்டும், ஏன் அவரின் குழந்தை பிறந்த நாள் கூட ஆகட்டும், மேலை நாட்டு கலாச்சாரத்தை இவர் பின்பற்றுவதையே நாம் காண முடியும். நீ தமிழனா ஆதராம் காட்டு, லேப் டெஸ்ட் காட்டு, என்று நகைக்கும்படியாக செயல்படும் இவரா தமிழர்.
♦ தமிழ் கடவுள் அடையாளத்தையே மாற்றி முருக்கேறி இருந்தால் அவன் முருகன் என்று ஓர் புருடாவை கிளப்பி விட்டு காலம் காலமாக ஔவையார், அருணகிரி, வள்ளலார் என்று பல மகான்கள், ஞானிகள் வணங்கி மகிழ்ந்த முருகனை வணங்காமல் இவர் கண்டுபிடித்த பொம்மையை வணங்க சொல்வது தமிழர்கள் எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்த இவரா தமிழர்.
♦ தமிழ் புலவர்கள், மேன்மக்கள், நம்முன்னோர்கள் என்று பாரம்பரியமாக வணங்கிய சிவலிங்கத்தை ஆபாசமாக மற்றும் கீழ்தரமாக விமர்சனம் செய்து விட்டு ஹிந்துக்களின் ஒட்டுக்காக அரசியல் ஆதாயம் தேடும் வகையில் தஞ்சை பெரிய கோவில் சென்று சிவனை வழிப்படுவது போல் நாடகம் நடத்தும் இவரா தமிழர்.
♦ வரலாற்றில் இடம் பிடித்த எவ்வளவோ மாவீரர்களின் தியாகத்தையும், போர் குணத்தையும், தனக்கு சாதகமாக மாற்றி பேசுவதும் அந்த இடத்தில் சீமான் இருந்திருந்தால் என்ன செய்து இருப்பான் தெரியுமா? என்று மேன்மக்களை கொச்சைப்படுத்தும் இவரா தமிழர்.
♦ மாற்றுமத விழாக்களிலோ, நிகழ்ச்சிகளிலோ கலந்துக்கொள்ளும் பொழுது தமிழர் வழிபாட்டுமுறையை பெருமையாகவும், அதை அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று வலியுத்தாமல் மற்ற அரசியல்வாதிகள் போல் தன் சுயநலத்திற்காக பேசிவரும் இவரா தமிழர்
♦ என் ஆத்தா, அப்பத்தா, தங்கச்சி என்று தமிழ் பெண்களை உரிமையோடு அழைக்கும் இவர் தான் பல பெண்களின் வாழ்வில் விளையாடி உள்ளார் என்பதை டுவிட்டரில் பொம்பள பொறுக்கி சீமான் என்று அழைக்கும் நிலைக்கு தமிழர் மானத்தை வாங்கிய இவரா தமிழர்
ஆக்கம்- தஞ்சைதாசன் / மலைதமிழன்