சில நாட்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA க்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதிகள் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் சில ஹிந்து மதத்தை சார்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள். அதில் ஒரு ஜோடிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து போராட்டக்கள மேடையிலே அவர்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் திருமணம் செய்து வைத்தனர். இதனைதொடர்ந்து தற்போது ஒரு பெண்ணின் வளைகாப்பு நிகழ்ச்சியை போராட்ட களத்தில் கொண்டாடியுள்ளனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவ “போராட்ட களத்தில் போராடுவதை தவிர மற்ற அனைத்து காரியங்களையும் போராட்டக்காரர்கள் செய்கிறார்கள். போராட்ட களத்தில் கொஞ்சம் கொஞ்சமாக திருமண நிகழ்ச்சி, வளைகாப்பு நிகழ்ச்சி போன்ற விழாக்களை இஸ்லாமிய போராட்டக்காரர்கள் நடத்தி வருவதால் பொதுமக்களுக்கு போராட்டக்காரர்கள் மேல் நம்பகத்தன்மை குறைந்து சற்று கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கலாய்த்து நெட்டிசன்கள் சமுக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு வறுத்தெடுக்கின்றனர்.
வண்ணாரப்பேட்டை போராட்ட களமா, அட்லீயின் படமா – நெட்டிசன்கள் கிண்டல் !
Share it if you like it
Share it if you like it