செந்தில் பாலாஜிக்கு பா.ஜ.க. மூத்த  தலைவர் செம்ம டோஸ்!

செந்தில் பாலாஜிக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் செம்ம டோஸ்!

Share it if you like it

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொய் குற்றச்சாட்டிற்கு தமிழக பா.ஜ.க. துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் மூலம் தரமான பதிலடியை வழங்கி இருக்கிறார்.

நாராயணன் ட்விட்டர் பதிவு இதோ.

மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், அதனால் வேறு வழியின்றி மின் கட்டணத்தை உயர்த்தியே தீர வேண்டும் என்றும், மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் மானியத்தை நிறுத்துவோம் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததால் வேறு வழியில்லாமல் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருக்கிறார்.

மத்திய அரசு தொடர்ந்து பல ஆண்டுகளாக பல்வேறு சீர்திருத்தங்களை மின் துறையில் செய்து வருகின்றன. மத்திய பா.ஜ.க அரசின் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளினால் 2014 – க்கு பிறகே, தடையில்லா மின்சாரம் நமக்கு கிடைத்து வருகிறது என்பதை நாடே நன்கு அறியும்.

மின் நுகர்வு அதிகரித்து கொண்டே இருக்கும், நிலையில் உற்பத்தி மற்றும் விநியோகம் குறித்து பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வலியுறுத்தியும் தமிழக அரசு செயல்படுத்தாமல், மானியம் மட்டும் வேண்டும். ஆனால், சீர்திருத்தம் செய்ய மாட்டோம் என்றும் அலட்சியமாக இருப்பதே இந்நிலைக்கு காரணம்.

ஓட்டை உள்ள பாத்திரத்தில் நீரை எப்படி சேமிக்க முடியும்? அதுபோல் நிர்வாக சீர்கேடு, அரசியல், லஞ்சம், ஊழல், முறைகேடுகள் போன்ற பல ஓட்டைகளை அடைக்காமல் மக்களின் மீது விலை சுமையை ஏற்றுகிறது தமிழக அரசு. நஷ்டத்திலிருந்து, லாபத்திற்கு செல்ல வேண்டுமானால் அரசு மின் உற்பத்தி நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

என்றும், மின் விநியோகத்தை தனியாரிடம் அளிப்பதன் மூலம் விநியோகம் மற்றும் பகிர்மானத்தில் நடைபெறும் ஊழல், திருட்டுகளை தடுக்க முடியும் என்றும், மின்கட்டணத்தை படிப்படியாக உயர்த்துவதன் மூலம் நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும் என்று மூன்று ஆலோசனைகளை மத்திய அரசு பல ஆய்வுகளின் அடிப்படையில் பல வருடங்களாக வலியுறுத்தி கொண்டே இருக்கிறது. ஆனால், மின் திருட்டை தடுத்த நிறுத்தவோ, ஊழலை ஒழிக்கவோ, இலவச மின்சாரத்தில் நடைபெறும் முறைகேடுகளை முறியடிக்கவோ, அரசு மின் நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவோ தமிழக அரசு எந்த தீவிர நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.

விவசாய நிலங்களுக்கு இலவச மின்சாரம் அளிப்பதில் உள்ள முறைகேடுகளை தடுக்க சிறு குறு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தை அமல்படுத்துமாறு மத்திய அரசு தொடர்நது கூறி வரும் நிலையில், தமிழக அரசு அதை செயல்படுத்த மறுக்கிறது.

இந்த திட்டத்தை அமல்படுத்தினால், மட்டுமே உரிய பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதோடு, இதில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க முடியும். மேலும், சூரிய மின் உற்பத்தியில் முதலீடு செய்பவர்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளையும், மானியங்களையும் அளித்து வருகின்ற நிலையில், திட்டங்களுக்கு மாநில அரசிடம் தடையில்லா சான்று பெறுவதற்கான விண்ணப்பத்தை பெறுவதற்கு முன்னரே ஒரு மெகாவாட்டுக்கு ரூபாய். 20 லட்சம் லஞ்சம் கொடுத்தாக வேண்டும் என்ற அவல நிலை இருக்கையில், முதலீட்டாளர்கள், முதலீடு செய்ய எப்படி முன் வருவார்கள்?

அப்படியே வந்தாலும் குறைந்த விலையில் மின்சாரத்தை எப்படி வழங்க முடியும்? லஞ்சம், ஊழல், முறைகேடுகள், நிர்வாக சீர்கேடு, முறையான திட்டமின்மை, மலிவு அரசியல் ஆகிய காரணங்களால் மின் உற்பத்தி, பகிர்மானம் மற்றும் விநியோகத்தை முறையாக செய்யமுடியாமல் மின் வாரியத்தையும், பகிர்மான கழகத்தையும் பெரும் நஷ்டத்தில் மூழ்க விட்டதற்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், மத்திய அரசின் நிர்பந்தத்தால் தான் மின் கட்டணத்தை உயர்த்துகிறோம் என்று கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நிர்வாக திறனற்ற நிலையில், லஞ்சம், ஊழலை ஒழிக்க மனமில்லாத அரசு பழியை மத்திய அரசின் மீது போட்டு தப்பித்து கொள்ள பார்ப்பது மக்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகமே. மின்சாரத்தை சேமித்தால் அரசுக்கு லாபம். இல்லையேல் அரசியல்வாதிகளுக்கு லாபம் என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்ற கழக அரசு. உண்மையில், மக்கள் மீது அக்கறையிருந்தால் மத்திய அரசின் ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை பின்பற்றி நாட்டின் வளர்ச்சிக்கு பயன்பெறும் திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுங்கள். அதை விடுத்து, மத்திய அரசின் மீது விமர்சனம் செய்து விட்டால் மக்கள் உங்களின் தவறுகளை மன்னித்து விடுவார்கள் என்று எண்ணாதீர்கள்.


Share it if you like it