ரோட்டில் நடந்து சென்றவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனம்!

ரோட்டில் நடந்து சென்றவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனம்!

Share it if you like it

முதியவர்கள், பிச்சைக்காரர்கள் மற்றும் ரோட்டில் நடந்து சென்றவர்களை கூட விட்டு வைக்காமல் வேனில் ஏற்றி சென்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனம். இது குறித்தான காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே, அட்டுகல் மலையடிவாரத்தில் கருணை பயணம் எனும் கிறிஸ்தவ காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் இருந்து, கடந்த இரண்டு நாட்களாக எங்களை காப்பாற்றுங்கள் என கூக்குரல் எழுந்து இருக்கின்றன. இதையடுத்து, சந்தேகம் அடைந்த உள்ளுரை சேர்ந்த பழங்குடியின மக்கள் அங்கு சென்று பார்த்து இருக்கின்றனர். அப்போது, 50-க்கும் மேற்பட்டவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து, ஊர் மக்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தாசில்தார் மற்றும் உயர் அதிகாரிகள் வந்து விசாரித்து இருக்கின்றனர்.

பிச்சைகாரர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவே இங்கு அவர்களை தங்க வைத்து இருக்கிறோம் என காப்பாகத்தை சேர்ந்தவர்கள் கூறியிருக்கின்றனர். ஆனால், அங்கிருந்தவர்கள் எங்களை வலுக்கட்டாயமாக இங்கு அடைத்து வைத்து இருப்பதாக உருக்கமுடன் கூறியுள்ளனர். அதில், ஒருவர் நான் வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த போது என்னை அடித்து இழுத்து ஆம்புலன்ஸில் ஏற்றி இங்கு கொண்டு வந்து விட்டதாக கூறி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம், பார்க்கும் போது கிட்னியை பறிகொடுத்த வடிவேலு ஞாபகம் வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it