தி.மு.க.விற்கு மீண்டும் தரமான பதிலடியை கொடுத்த பா.ஜ.க.!

தி.மு.க.விற்கு மீண்டும் தரமான பதிலடியை கொடுத்த பா.ஜ.க.!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடியின் புகைப்படத்தை புறக்கணித்த தி.மு.க.விற்கு தமிழக பா.ஜ.க. மீண்டும் தரமான பதிலடியை கொடுத்து இருக்கின்றன.

சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், அடுத்த பூஞ்சேரி கிராமத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இப்போட்டி, அடுத்த மாதம் ஆகஸ்டு 10- ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தியாவில், முதன் முறையாக இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்து இருக்கின்றன. சுமார் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இதனிடையே, செஸ் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக, தமிழக அரசின் சார்பில் அது குறித்தான விளம்பரம் ஒன்று அண்மையில் வெளியாகி இருந்தன. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நடித்து இருந்தனர். இந்த, “சரவணா ஸ்டோர் விளம்பரத்தில்” நடிக்க மக்களின் வரிப்பணம் தான் கிடைத்ததா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். நாட்டிற்கு, பெருமை சேர்த்த விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பிரக்ஞானந்தாவை புறக்கணித்து விட்டு ஏன்? இந்த விளம்பரம் என தமிழக அரசை சமூக ஆர்வலர்கள் துளைத்து எடுத்து இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், ’செஸ் விளையாட்டின் மூலம் இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்களை கெளரவிக்கும் விதமாக, தமிழக பா.ஜ.க.வினர் விடியல் அரசிற்கு சமீபத்தில் பதிலடி கொடுக்கும் விதமாக காணொளி ஒன்றினை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில், செஸ் திருவிழாவை துவக்கி வைக்கும் விதமாக, பாரதப் பிரதமர் மோடி நாளை தமிழகம் வர இருக்கிறார். ஆனால், தமிழக அரசு முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் புகைப்படத்திற்கு மட்டுமே அதிக முன்னுரிமையை வழங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை, அறிந்த பா.ஜ.க.வினர் செஸ் விளையாட்டு போஸ்டர்களில் பிரதமரின் புகைப்படத்தை ஒட்டும் பணியை மேற்கொண்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it