தொழுகை நடத்த வேண்டுமானால் மசூதிக்கு செல்லுங்கள், வீட்டு வீடு மசூதி கட்ட அனுமதி தர முடியாது என்று கேரள ஐகோர்ட் அதிரடியாக கூறியிருக்கிறது.
கேரள மாநிலம் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிறது. அந்தளவுக்கு அங்கு ஹிந்து கோயில்கள் நிறைந்து இருக்கின்றன. தவிர, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத மாற்றத்திற்குப் பிறகு, ஏராளமான சர்ச்களும், மசூதிகளும் கட்டப்பட்டிருக்கின்றன. இந்த சூழலில், இஸ்லாமிய சமூகத்தினர் தங்கள் வீட்டின் அருகே மசூதி கட்ட அனுமதி கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, அவர்களது வீட்டுக்கு அருகே புதிய மசூதியோ அல்லது பிரார்த்தனை மண்டபமோ கட்ட அனுமதி மறுத்துவிட்டது.
இதுகுறித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பில், “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார். முஸ்லீம் சமூகத்தினர் தங்களது பிரார்த்தனைகளை மசூதியில் நடத்த விரும்பினால், அதற்காக அவர்கள் தங்கள் இல்லத்திற்கு அருகில் ஒரு புதிய பிரார்த்தனை மண்டபத்தை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, அருகிலுள்ள மசூதிக்கு சென்று பிரார்த்தனைகளை நடத்தலாம். மேலும், கேரளாவின் விசித்திரமான புவியியல் நிலைமை காரணமாக, இம்மாநிலம் ‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆனால், அப்படிப்பட்ட கடவுளின் தேசத்தை நாம் மதக் கூடங்கள் மற்றும் பிரார்த்தனை அரங்குகளால் நிரப்பி விட்டோம். ஆகவே, அரிதானதைத் தவிர, வேறு எந்த புதிய மத இடங்களையும், பிரார்த்தனை அரங்குகளையும் அனுமதிக்கும் நிலையில் நாம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது.