டெல்லி நீதிபதி இடமாற்றம், எதிர்க்கட்சிகளின் புரளி ,தெளிவுப்படுத்திய நீதிபதி-முரளிதர்!

டெல்லி நீதிபதி இடமாற்றம், எதிர்க்கட்சிகளின் புரளி ,தெளிவுப்படுத்திய நீதிபதி-முரளிதர்!

Share it if you like it

டெல்லி கலவரத்தின் பொழுது நீதிபதி எஸ். முரளிதர் பா.ஜ.க தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட அவரை மத்திய அரசு பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில்  நீதிபதி முரளிதரும் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது அவர் இவ்வாறு கூறியுள்ளார்; பிப்ரவரி 17ஆம் தேதி கொலீஜியம் எனக்கு கடிதம் எழுதியிருந்தது. அதில் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மாற்றுதல் பற்றி குறிப்பிட்டு இருந்தது. அதற்கு நான் எந்த ஆட்சேபனை இல்லை என்று என் கருத்தினை கொலீஜியத்திற்கு தெளிவுபடுத்தினேன்.

அதன் பிறகே பிப்ரவரி 27 அன்று மத்திய அரசு இடமாற்ற அறிவிப்பை வெளியிட்டது. இதற்கும் மத்திய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் நீதிபதியை பழி வாங்கி விட்டது, என்று பூதாகரமான செய்தியாக ஊடகங்களும் சேர்த்து வெளியிட்டுவிட்டது என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி முரளிதர் இடம் மாற்றம் பற்றி அண்ணன், தங்கை பரப்பிய புரளி!

Share it if you like it