தி.மு.க. செய்த ஊழல் ஆதாரங்களை கொடுக்க நான் தயார். புதிய தலைமுறை ஊடகம் தயாரா? என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவர், கமலாலயத்தில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார். இந்நிலையில், புதிய தலைமுறை ஊடக நெறியாளர் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்தார். இதையடுத்து, தி.மு.க. செய்த ஊழல்களையும், அதுகுறித்தான ஆதாரங்களையும் உங்கள் ஊடகத்தில் ( புதிய தலைமுறை) வெளியிட தயாரா? என அண்ணாமலை பதில் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, அந்த ஊடகத்தின் நிருபர் தயார் என்று கூறினார். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேரில் வந்து ஆதாரத்தை வழங்கினால் மட்டுமே நாங்கள் ஒலிபரப்பு செய்வோம் என அந்த ஊடக நிருபர் அந்தர் பல்டி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்தான, கூடுதல் தகவல்களுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசிய காணொளியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.