உ.பி.யை மிஞ்சிய திராவிட எலி!

உ.பி.யை மிஞ்சிய திராவிட எலி!

Share it if you like it

19 கிலோ கஞ்சாவை எலிகள் நாசம் செய்து விட்டதாக நீதிமன்றத்தில் சி.எம்.பி.டி போலீஸார் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த 2018 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கஞ்சா விற்பனை செய்ததாக கூறி மூன்று பெண்களை சி.எம்.பி.டி போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வகையில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு, போதை பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்தவகையில், கோயம்பேட்டில் உள்ள சி.எம்.பி.டி காவல்துறையினர் குற்றபத்திரிகை தாக்கல் செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருந்தனர். இதையடுத்து,

முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றபத்திரிகையிலும் மூன்று பெண்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா 30 கிலோ என்று குறிப்பிடப்பட்டு இருந்தன. எனினும், வெறும் 11 கிலோ கஞ்சா மட்டுமே நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து, மீதி 19 கிலோ கஞ்சா எங்கே? என நீதிபதி கேட்டு இருக்கிறார். இதற்கு, சி.எம்.பி.டி போலீசார் கூறியதாவது ;

குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. காவல் நிலைய கட்டிடம் பழுதடைந்து பாதுகாப்பற்ற முறையில் இருந்ததாலும், அண்மையில் பெய்த மழை மற்றும் எலிகள் கஞ்சாவை தின்று விட்டதால் அதன் அளவு குறைந்து விட்டதாக நீதிமன்றத்தில் சி.எம்.பி.டி. போலீசார் எழுத்துபூர்வமாக தெரிவித்து இருக்கின்றனர்.

கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாக, காவல்துறையினர் கூறிய பதிலால் அதிர்ச்சியடைந்த நீதிபதி, முறையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை என்ற காரணத்தினால், குற்றத்தை நிருபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில் மூன்று பெண்களையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்துள்ளார். மேலும், முறையாக ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க தவறிய சி.எம்.பி.டி காவல்துறையினரையும் நீதிபதி கண்டித்து உள்ளார்.

இதேபோன்றதொரு சம்பவம் அண்மையில் உ.பி.யில் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it