ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: சதாம், சையது கைது!

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: சதாம், சையது கைது!

Share it if you like it

மேற்குவங்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக முகமது சதாம், சையது அகமது ஆகியோரை கொல்கத்தா காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை பிரிவினர் கைது செய்திருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு எதிராக சில அந்நிய சக்திகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) என்கிற அமைப்பு, நாட்டுக்கு எதிராக சதி செய்தல், பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்குவதற்காக நிதி திரட்டுதல், இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புகளுக்கு சப்ளை செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில வருடங்களாகவே தகவல் வெளியாகி வந்தது. ஆகவே, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), பி.எஃப்.ஐ. நிர்வாகிகளை தொடர்ந்து கண்காணித்து வந்தது. இதில், பல்வேறு நபர்கள் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்து கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நாடு முழுவதும் பி.எஃப்.ஐ. நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ., சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவை இணைந்து மாஸ் ரெய்டை நடத்தின. 2 கட்டங்களாக நடந்த இந்த ரெய்டில் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பி.எஃப்.ஐ. அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது மத்திய அரசு. இதன் தொடர்ச்சியாக, பி.எஃப்.ஐ. அமைப்பை கலைப்பதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர். எனினும், வேறொரு பெயரில் அமைப்பைத் தொடங்கி நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம், பி.எஃப்.ஐ. நிர்வாகிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது, அவர்களது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மேற்குவங்க மாநிலம் ஹவுரா மாவட்டம் அஃப்தாபுதீன் லேனில் வசிக்கும் முகமது சதாம், ஷிப்பூர் தானாவின் கோலம் ஹொசைன் லேன் பகுதியில் வசிக்கும் சையது அகமது ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அப்போது, இருவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல் மற்றும் ஆள் சேர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது தெரியவந்தது.

மேலும், இருவரும் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததோடு, பயங்கரவாதத்தையும் ஊக்குவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்ய என்.ஐஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்த சூழலில், இருவரும் பயங்கரவாத அமைப்பு நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இதையறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் இருவரையும் துரத்திச் சென்றனர். கொல்கத்தாவை ஹவுராவுடன் இணைக்கும் 2-வது ஹூக்ளி பாலத்தில் விரட்டிச் சென்று கொண்டிருந்தனர். இதை கவனித்து இருவரும் அதிவேகமாக பைக்கை செலுத்தி கொல்கத்தாவின் வித்யாசாகர் சேதுவின் கிழக்குச் சரிவு பகுதிக்குச் சென்றனர். எனினும், அதிகாரிள் விரட்டிப் பிடித்து இருவரையும் கைது செய்தனர்.

அர்களிடம் இருந்து ஒரு மடிக்கணினி மற்றும் 2 கையடக்கத் தொலைபேசிகளை போலீஸார் மீட்டதோடு, சூட்டோடு சூடாக கொல்கத்தாவில் இருவருக்கும் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். மேலும், அஃப்தாபுதீன் லேனில் உள்ள முகமது சதாமின் வீடு, ஹொசைன் லேன் பகுதியில் அமைந்துள்ள சையத் அகமதுவின் வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில், லேப்டாப், டெபிட் கார்டுகள், சில மொபைல் போன்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், மடிக்கணினியில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருக்கும் ரகசிய குறியீடுகளும், ஜிஹாதி உள்ளடக்கமும் கண்டறியப்பட்டது. பின்னர், இருவரும் பாங்க்ஷால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.


Share it if you like it