தமிழக ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினை நடிகர் சத்திய ராஜ் பாராட்டி பேசியிருக்கிறார். இதனை தொடர்ந்து, நெட்டிசன்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்பு பொதுமக்கள் அச்சத்துடனும், பயத்துடனும் வாழும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு, சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. அந்த வகையில், சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தி.மு.க. வட்டச் செயலாளர் செல்வம் என்பவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதவிர, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஆள் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகின்றன.
இதனை தொடர்ந்து, தி.மு.க ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட் மற்றும் அவரது நண்பர்கள் இளம் பெண் ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கன்னியாகுமரியையும் தாண்டி நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியிருந்தது.
இப்படியாக, விடிந்தும் விடியாத விடியல் ஆட்சியை சூரிய கட்சியின் தலைவர் நடத்தி வருகிறார் என்பதே கசப்பபான உண்மை. இப்படிப்பட்ட சூழலில் தான், 2023- ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்ட தொடர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் கடந்த 9 – ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவு அவை மரபை மீறி நடந்து கொண்டனர். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ஆளுநர் அவையை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து, தி.மு.க.விற்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், திரைப்பட நடிகர் சத்தியராஜ் முதல்வர் ஸ்டாலின் செயல்பாட்டினை வெகுவாக பாராட்டி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினுக்கு ஐஸ் வைக்கும் விதமாக தொடர்ந்து காணொளி வெளியிடும் கட்டப்பா விடியல் ஆட்சியின் அவலம் குறித்து பேச மறுப்பது ஏன்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.