உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீண்டும் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்க முயன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகநீதி, சுயமரியாதை, சகோதரத்துவம் என மேடை தோறும் பேசக் கூடியவர்கள் தி.மு.க.வினர். இதுதவிர, பட்டியல் சமூக மக்களின் உண்மையான பாதுகாவலர்கள் நாங்கள் தான் என மார்தட்டிக் கொள்ள கூடியவர்கள். ஆனால், தி.க. மற்றும் தி.மு.க.வினரே அச்சமூக மக்களை தொடர்ந்து இழிவுப்படுத்தி வருகின்றனர் என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
அந்தவகையில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி, பட்டியலின மக்கள் இன்று நீதிபதியாக இருக்கிறார்கள் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது இவ்வாறு கூறினார் ; ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கோவில்கள் இருக்கும் தெருவில் நடக்கவே முடியாது. இன்று அந்த நிலைமை உண்டா? இது எல்லாம் எப்படி மாறியது. தந்தை பெரியார் போட்ட பிச்சையால் இது எல்லாம் மாறியது என்பதை யாராவது மறுக்க முடியுமா? என சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் உயர்கல்விதுறை அமைச்சர் பொன்முடி மீண்டும் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்க முயன்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.