கவர்னர் பேசுவதுதான் உரை. அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி கூறியிருக்கிறார். ஆகவே, தமிழக அரசு கலைக்கப்படுமா என்கிற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
தமிழக சட்டமன்றத்தின் நிகழாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இதற்காக, தமிழக அரசு கொடுத்திருந்த கவர்னர் உரையில், தி.மு.க. அரசை புகழும் வகையில் வாசகங்களும், சர்ச்சைக்குரிய வார்த்தைகளும் இடம் பெற்றிருந்தன. இதை நீக்குமாறும், திருத்தம் செய்யுமாறும் கவர்னர் கூறியதை தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே. தனது உரையின்போது சர்ச்சைக்குரிய மற்றும் புகழ்ச்சியான வார்த்தைகளை தவிர்த்துவிட்டு கவர்னர் படித்தார். இது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு மூக்குடைப்பாக அமைந்து விட்டது.
இதையடுத்து, கவர்னர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார் ஸ்டாலின். அதாவது, தமிழக அரசு கொடுத்த கவர்னர் உரையில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகள், வாசகங்கள் மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும். கவர்னர் இணைத்துப் பேசிய வார்த்தைகள் இடம்பெறாது என்று தீர்மானம் கொண்டு வந்தார். எனவே, அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் கவர்னர். இது ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கு அவமானமாகப் போய்விட்டது. ஆகவே, பதிலுக்கு கவர்னரை அவமானப்படுத்த தங்களது கட்சிக்காரர்களை தூண்டிவிட்டார் ஸ்டாலின்.
இதைத் தொடர்ந்து, ரெட்லைட் புகழ் ஆர்.எஸ்.பாரதி, ஆபாச பேச்சாளர் கூவம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர், கவர்னரை மிகவும் தரக்குறைவாகவும், ஆபாச வார்த்தைகளாலும் திட்டயதோடு, பயங்கரவாதியை ஏவி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர். அதேபோல, ஸ்டாலினும் தரம் தாழ்ந்து நாலாந்திர மனிதரைப் போல கவர்னரை அவன் இவன் என்று ஏகவசனத்தில் பேசினார். தி.மு.க.வினரின் இத்தகைய செயல்கள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தி.மு.க. அரசுக்கு எதிராக மத்திய அரசு சாட்டையை சுழட்டும் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், தமிழக அரசுக்கு ஆபத்து இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி. துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழா நேற்று நடந்தது. இதில் பேசிய குருமூர்த்தி, “கவர்னர் என்ன பேசுகிறாரோ அதுதான் உரை. இதில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர வேண்டுமானால், அவையில் விவாதத்தின்போது யாராவது தீர்மானம் கொண்டு வந்து அதை அவை ஏற்றுக் கொண்டால் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். அதேசமயம், கவர்னர் உரையை ஏற்க மாட்டோம் என்று சொல்லி, கவர்னர் உரையை விவாதிப்பதற்கு முன்னதாகவே தீர்மானம் கொண்டு வரமுடியாது.
தவிர, கவர்னர் உரைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அந்த அரசாங்கம் ராஜினாமா செய்ய வேண்டும். இதுதான் முறை. இதேபோல, பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கவர்னர் உரைக்கு ஒப்புதல் அளிக்காமல் இரு அரசுகள் ராஜினாமா செய்திருக்கின்றன. ஆகவே, கவர்னர் உரைக்கு ஒப்புதல் அளிக்காமல் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தது தவறு. இப்படியொரு யோசனையை ஸ்டாலினுக்கு யார் சொல்லிக் கொடுத்தது என்பது தெரியவில்லை. இது ஒரு அரசியலமைப்பு விவகாரம். ஆகவே, இது நீதிமன்றத்துக்குச் செல்லும் என்று தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.
குருமூர்த்தி பேசிய இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த தி.மு.க.வினர், எங்கே ஆட்சியைக் கலைத்து விடுவார்களோ என்கிற கலக்கத்தில் இருக்கிறார்கள்.