ஜெயலலிதா தி.மு.க.வினர் போன்ற ரவுடிகளுக்குத்தான் எதிரி: ஆர்.எஸ்.பாரதிக்கு அரசியல் விமர்சகர் பதிலடி!
ஜெயலலிதாவை பற்றி ஆர்.எஸ்.பாரதிக்கு என்ன தெரியும். அவர் தி.மு.க.வினரைப் போன்ற ரவுடிகளுக்குத்தான் எதிரி என்று ஆர்.எஸ்.பாரதிக்கு அரசியல் விமர்சகர் வரதராஜன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
தமிழக சட்டமன்றத்தின் நிகழாண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி 13-ம் தேதி நிறைவடைந்தது. முதல் நாள் நடந்த கவர்னர் உரையின்போது, தி.மு.க. அரசுத் தரப்பில் கொடுக்கப்பட்ட கவர்னர் உரையில், தி.மு.க. அரசை புகழும் வகையிலான வார்த்தைகள் மற்றும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கவர்னர் படிக்காமல் தவிர்த்து விட்டார்.
இது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை அவமானப்படுத்துவதுபோல அமைந்துவிட்டது. மேலும், கவர்னர் இப்படிச் செய்வார் என்று தி.மு.க.வினர் எதிர்பார்த்திருப்பார்கள்போல. எனவே, கவர்னருக்கு எதிராக தயாராக கொண்டு வந்திருந்த தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் வாசித்தார். இது அவை மரபை மீறிய செயல் என்பதால் கவர்னர் வெளிநடப்பு செய்து விட்டார். இதை தி.மு.க.வினர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேலும், இது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு பெரிய அவமானமாகப் போய்விட்டது.
இதை ஜீரணிக்க முடியாத தி.மு.க.வினர் கவர்னரை வசைபாடத் தொடங்கினர். அந்த வகையில், ரெட் லைட் புகழ் ஆர்.எஸ்.பாரதி, கூவம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கவர்னரை ஏகவசனத்தில் திட்டியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தனர்.
கூவம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், அம்பேத்கர் பெயரை சொல்ல முடியாது என்றால் நீ காஷ்மீருக்கு போடா. பின்னாலேயே தீவிரவாதியை அனுப்பி உன்னை சுட்டுக் கொல்கிறோம் என்று கவர்னருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து வைத்திருக்கிறார்கள்.
அதேபோல, ரெட் லைட் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், சேகர்பாபு போன்ற ஆட்களை ஏவி விட்டிருந்தால் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து அடித்திருப்பார்கள். கவர்னர் உருப்படியா வீடு போய்ச் சேர்ந்திருக்க முடியாது. அதோடு, ஜெயலலிதா மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் கவர்னரை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியும், அரசியல் விமர்சகருமான வரதராஜன், ஜெயலலிதாவைப் பற்றி ஆர்.எஸ்.பாரதிக்கு என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், ஜெயலலிதாவை பொறுத்தவரை நல்லவர்களுக்கு நல்லவர். கெட்டவர்களுக்குத்தான் கெட்டவர்.
2001 உள்ளாட்சித் தேர்தலின்போது திருவான்மியூரில் அராஜகத்தில் ஈடுபட்ட ஸ்டாலினை ஓட ஓட விரட்டி அடித்தார். கராத்தே தியாகராஜன்தான் அவரை உதைத்தவர். இதனால் தலைதெறித்து ஓடிய ஸ்டாலின் சப்போர்ட்டுக்கு சரத்குமாரை கூட்டிக் கொண்டு வந்து நடுங்கியபடியே நின்று கொண்டிருந்தார்.
மற்றபடி கவர்னர்களிடம் நல்லவிதமாகவே நடந்து கொண்டார். பீஷ்மநாராயண் சிங், பாத்திமா பீவி ஆகியோருடன் நல்ல நட்பு கொண்டிருந்தார். சென்னா ரெட்டியைப் பொறுத்தவரை, அவர் ரவுடி அரசியல்வாதி. ஆந்திராவில் அவர் போடாத ஆட்டம் இல்லை. அந்த ரவுடித்தனத்தை தமிழகத்திலும் காட்ட முயன்றார். அதனால்தான் ஜெயலலிதா அவரது கொட்டத்தை அடக்கினார். மற்றபடி படித்த நல்ல கவர்னர்களுடன் அவர் சுமுகமான உறவையே கொண்டிருந்தார் என்று படித்த, நல்ல மனிதரான கவர்னர் ஆர்.என்.ரவியிடம் தி.மு.க.வினர் தேவையில்லாமல் வம்பிழுப்பதாகக் கூறி, ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.