விடுதலை சிறுத்தை கட்சியினர் போன் மூலம் கொடுத்து வரும் தொல்லைகளுக்கு பிரபல நடிகை வனிதா விஜயகுமார் தக்க பதிலடியை கொடுத்து இருக்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் விக்ரமன். இவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் பங்கேற்றுள்ளார். அந்தவகையில், இந்த சீசனின் இறுதிக்கட்ட நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. சீசனின் இறுதிப் போட்டிக்கு, அசீம், விக்ரமன், அமுதவாணன், மைனா, ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இதில், வி.சி.க. செய்தி தொடர்பாளர் விக்ரமன் வெற்றி பெற வேண்டி அக்கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுயின் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் அவருக்கு வாக்களிக்கும் படி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மக்களிடம் ஆதரவு கோரியிருந்தார். இதற்கு, பிரபல நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
ஓர் அரசியல் தலைவர், தன் ஆதரவாளர்களைத் தூண்டி விட்டு ரியாலிட்டி ஷோவுக்கு எப்படி? வாக்களிக்கச் செய்ய முடியும்? என காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில், வி.சி.க.வை சேர்ந்த தொ(கு)ண்டர்கள் நடிகை வனிதாவிற்கு தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில்தான், இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது;
நான் பேசிய யூடியூப் சேனலுக்கு, என்னை எச்சரிக்க ஃபோன் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். நான், யாருக்கும் எதற்கும் பயந்தவள் இல்லை. உங்கள் அரசியல் புத்தி என்ன என்று காலம் காலமாகப் பார்த்திருக்கிறோம். நேர்மையாக மக்களுக்கு நல்லது செய்து முன்னேறப் பாருங்கள். உங்கள் அரசியலை என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். ஒரு பிக்பாஸ் ஜெயிப்பதற்கு இவ்வளவு அராஜகம் என்றால், தேர்தல் வரும்போது என்னென்ன செய்வார்கள், இவர்களைப் போன்ற அரசியல்வாதிகள்?
நீங்கள் உங்கள் அரசியல் வேலையை பாருங்கள். எங்கள் பொழுதுபோக்குத் தொழிலில் தொந்தரவு செய்வதை நிறுத்துங்கள் என கூறியிருக்கிறார்.