வ.உ.சி.யின் அடையாளத்தை அழிக்க முயலும் தி.மு.க. அரசிற்கு மரகத மீனாட்சி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சிறப்பு மலர் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இந்நூலை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில், வ.உ.சி.யின் புகைப்படம் மற்றும் அவரது கையொப்பம் இடம் பெற்று இருந்தன. அதில், ‘பிள்ளை’ என்பதை தி.மு.க. அரசு அதிரடியாக நீக்கியிருந்தது. இதற்கு, சமூக ஆர்வலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் விடியல் அரசை கண்டித்து இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், வ.உ.சியின் கடைசி மகன் வாலேஸ்வரன் பிள்ளையின், மகள் மரகத மீனாட்சி. தனது தாத்தாவின் பெயரில் உள்ள ‘பிள்ளையை நீக்கிய தி.மு.க. அரசை மிக கடுமையாக சாடி இருக்கிறார். அவர், பேசிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் அடையாளங்களை விடியாத அரசு மறைத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.